தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மூலம் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் தடுப்பூசி முகாம் 13.06.2021 ஞாயிற்றுக் கிழமை இன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு (18 வயது முதல் அனைத்து வயதினருக்குமான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முகாம்) பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா .ஜெஸ்லின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கீழப்பாவூர் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரோனா தடுப்பூசி (18 வயது முதல் அனைத்து வயதினருக்கும்) முதல் தவணை தடுப்பூசி முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
1. குருசாமிபுரம் கோவில் மைதானம் (கோவி சீல்டு)
2. ஆவுடையானூர் ஊராட்சி மன்றம் (கோவி சீல்டு)
3. காந்திபுரம் சுடலைமாடசாமி கோவில் மைதானம் (கோவி சீல்டு)
4. சுரண்டை ஆர்.சி நடுநிலைப்பள்ளி 9வது வார்டு (கோவி சீல்டு)
5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாவூர்சத்திரம் (கோவேக்சின்)
குறிப்பு: தடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.