Home செய்திகள் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்; சுரண்டையில் அதிகாரிகள் அதிரடி.

விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்; சுரண்டையில் அதிகாரிகள் அதிரடி.

by mohan

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறையின் பரிந்துரையின் படி கொரோனா கால ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. பொதுமக்களிடத்தில் இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் வழிகாட்டு நெறிகளையும் அரசு வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிகளை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் சுரண்டை பகுதியில் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் சிவனு பெருமாள், சுரண்டை பஞ்.செயல் அலுவலர் வெங்கட கோபு, சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நிலையில் குழு அமைத்து சுரண்டை பஜாரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது கடைகளை மூட வேண்டிய நேரமான நண்பகல் 12:00 – கடந்தும் கடைகளை மூடாமல் திறந்து வைத்து வியாபார செய்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விதிகளை மீறிய இரண்டு மளிகை கடைகளுக்கு தலா 500 வீதம் ரூ.1000/- அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து வியாபாரிகளிடம் பேசிய வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், வியாபாரிகள் ஊரடங்கு சமயத்தில் அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com