நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை, நுகர்வோர் விழிப்புணர்வு அறக்கட்டளை, திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி வேணுவனம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில், வாக்களிக்க தூண்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி மற்றும் கொல்லம் ரயில்களில் பிரயாணம் செய்யும் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, வரும் ஏப்ரல் ஆறாம் நாளன்று நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ரயில்களின் ஒவ்வொரு பெட்டிகளிலும் அமர்ந்துள்ள பயணிகளிடமும், நடைபாதையில் இருந்த மக்களிடமும் நூறு சதவீத வாக்குப் பதிவினை அடையச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் விழிப்புணர்வு ஒட்டுத் தாள்களும் (ஸ்டிக்கர்கள்) ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டது. இந்த பரப்புரை நிகழ்ச்சிகளை திருநெல்வேலி ரயில் நிலைய அதிகாரி முருகேசன், பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் கவிஞர் பேரா,வள்ளுவர் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு அறக்கட்டளை செயலாளர் கணேசன், திர்நெல்வேலி ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் சோனா வெங்கடாசலம், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி வேணுவனம் சார்பில் உதவி ஆளுநர் முத்தையா, ரொட்டேரியன் சற்குணம், நல்லாசிரியர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பேஸ்புக்,யூடியூப், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே எழும் சந்தேகங்களை போக்கும் வகையில் நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர் பிரச்சாரம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.