பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அரசு சலுகைகள் பாரபட்சமின்றி வழங்க வேண்டும்-தென்காசி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்..

தென்காசியில் பத்திரிகையாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி பத்திரிகையாளர் சங்கமும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (தென்காசி மாவட்ட சங்கம்) இணைந்து பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மத்திய மாநில அரசின் சலுகைகள் பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும் என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர்.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக குடும்ப நல நிதி வழங்கிட வேண்டும். கொரோனா கால கட்டத்தில் களத்தில் பணியாற்றி வரும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசியை மத்திய அரசு ஏற்படுத்தி தரவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் களத்தில் பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மூலம் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பாரபட்சமின்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய அளவில் பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீவில்லிபுத்தூர் கு.வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி தென்காசி மாவட்ட அளவிலான பத்திரிகையாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கமும், தென்காசி பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்க தேசியக்குழு உறுப்பினர் மூத்த பத்திரிகையாளர் எம்.சண்முகம் தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தென்காசி மாவட்டத் தலைவர் சு.இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.தென்காசி பத்திரிகையாளர் சங்க தலைவர் கணபதி பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் எம்.முத்துசாமி, பொருளாளர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..