
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அட்மிஷனுக்கு லஞ்சம் பெறும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து மருத்துவமனை பணியாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பி வழிவதால் படுக்கை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் படுக்கை கிடைப்பதற்கும் உணவுக்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்கும் லஞ்சம் பெறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டபோதிலும் நோய் பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா தவிர்த்து பிற நோய்களுக்காகவும் வழக்கமான சிகிச்சைகளுக்காகவும் செல்பவர்கள் உள்நோயாளிகளாகத் தங்குவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதால் பிற நோயாளிகளை தலைமை அரசு மருத்துவ மனைகளுக்குச் சிகிச்சைக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.ஒரு சில இடங்களில் குறைவாக இருக்கும் படுக்கைகள் அனுமதித்து சிகிச்சை கொடுக்கிறார்கள். தென்காசி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் படுக்கை கிடைப்பதற்கும் சாப்பாட்டுக்கான டோக்கன் பெறுவதற்கும் மருத்துவமனை பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில், இது தொடர்பாக மருத்துவப் பணியாளர் லஞ்சம் பெறும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் காட்சி குறித்து தென்காசி அரசு மருத்துவமனையின் ஊழியரான கணேசன் என்பவரிடம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் விசாரணை நடத்தினார். லஞ்சம் பெற்ற மருத்துவப் பணியாளர்லஞ்சம் பெற்ற மருத்துவப் பணியாளர்விசாரணைக்குப் பின்னர் மருத்துவப் பணியாளர் கணேசன் சிவகிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மனை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.