
தமிழக அரசினால் COVID-19 வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் வருவாய்த் துறை காவல்துறை, பேரூராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதில் சுரண்டை குறுவட்டம் சிவகுருநாதபுரம் கிராமம் காந்தி பஜார் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நல்லசிவம் மகன் மாரி (38) என்பவர் தனது மளிகை கடையினை திறந்து வைத்து பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி அரசப்பன், சுரண்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், போலீஸ் ஏட்டு சமுத்திரக்கனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு ரூ.1000/- அபராதம் விதித்து காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் கடைக்கு சீல் வைத்தனர்.தொடர்ந்து கொரோனாவை தடுக்க அரசு அறிவித்துள்ள முககவசம் அணியாமலோ, தனி மனித இடைவெளியை பின்பற்றாமலோ, உரிய நேரத்தில் கடைகளை அடைக்காமலோ இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்தி
You must be logged in to post a comment.