நெல்லையில் மனித நேயமிக்க காவல் உதவி ஆய்வாளர்-பொதுமக்கள் பாராட்டு…

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக ஐயப்பன் பணியாற்றி வருகிறார். தனது மனிதநேயமிக்க செயலால் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.திசையன்விளை மன்னராஜா கோவில் அருகே உள்ள லூர்து அன்னை தெருவை சார்ந்த சுமார் 65 வயது மதிக்கதக்க ஹெலன் மேரி என்ற முதியவர் தனது வீட்டில் இரவில் தூங்கும்போது அவர் வீட்டின் உள்ளே கதவை மூடிவிட்டு தூங்கி உள்ளார். காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் திசையன்விளை காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் பூட்டிய வீட்டின் கதவை பொது மக்களின் உதவியுடன் உடைத்து பார்த்தபோது அந்த வயதான முதியவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து எழ முடியாத நிலையில் கிடந்துள்ளார்.இந்நிலையில், உடனடியாக முதியவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அந்த முதியவரின் உயிரை காப்பாற்ற உதவி அந்த முதியவரின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்து அந்த முதியவரை குடும்பத்தார்களிடம் ஒப்படைத்துள்ளார் காவல் உதவி ஆய்வாளர் திரு.ஐயப்பன். அவரின் மனிதநேயமிக்க இந்த செயலை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டியுள்ளார்கள்.ஒரு உயிரை காப்பற்ற உதவிய திசையன்விளை காவல் உதவி ஆய்வாளருக்கு திசையன்விளை பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..