Home செய்திகள் குற்றாலத்தில் மூதாதையர்களுக்கு திதி,தர்ப்பணம் செய்ய தடை-யானைப் பாலத்தில் சம்பிரதாயங்களை நிறைவேற்றிய மக்கள்…

குற்றாலத்தில் மூதாதையர்களுக்கு திதி,தர்ப்பணம் செய்ய தடை-யானைப் பாலத்தில் சம்பிரதாயங்களை நிறைவேற்றிய மக்கள்…

by mohan

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஆடி அமாவாசை தினத்தில் குற்றாலத்தில் பொதுமக்கள் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் ஆற்றோரம் அமைந்த படித்தறையில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை நாளில் அதிகளவில் பொது மக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும், திதி தர்ப்பணம் மற்றும் பிறசடங்கு சம்பிரதாயங்களை செய்வதும், அவ்வேலையில் அங்கு நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் இந்நோய்தொற்று அதிகம் ஏற்படும் அபயாம் இருப்பதாலும், பொது மக்கள் நலன் கருதி | 20.07.2020 ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரையோரம் மற்றும் நீர்நிலைகளில் ஒன்று கூடுவதையும், ஆறு மற்றும் நீர்நிலைகளில் நீராடுவதையும் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட நிர்வாகம் செய்தி குறிப்பில் கூறியுள்ளது.இதனால் இன்று ஆடி அமாவாசைக்கு பொதுமக்கள் குற்றால அருவி, செங்கோட்டை குண்டாறு அணை, குண்டாறு, சிற்றாறு, கடையநல்லூர் கருப்பாநதி, மேக்கரை அடவிநயினார் அணை, கடையம் கடனாநதி அணை, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் திதி, தர்ப்பணம் உள்ளிட்டவை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களின் மூதாதையருக்கு திதி, தர்ப்பணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தாமிரபரணி படித்துறைகளிலோ, நீர்வீழ்ச்சி மற்றும் நீர்நிலைகளிலோ பொதுமக்கள் திதி, தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.இதனால் பொதுமக்கள் அரசின் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு வழக்கம் போல் குற்றாலம் செல்வதை தவிர்த்தனர். அதே வேளையில் தங்களது தாய் தந்தையருக்கு முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் செய்யக்கூடிய முக்கிய கடமையான நிதி மற்றும் தர்ப்பணம் செய்யாவிட்டால் பெரும் பாவம் வந்து சேரும் என்ற நம்பிக்கை வைத்துள்ளதன் காரணமாக தென்காசி பகுதி பொதுமக்கள் யானைப்பாலம் சிற்றாறு பகுதியிலும் மேலும் சிற்சில நீர்நிலைகளிலும் நீராடி தங்களது முன்னோர்களுக்கு நிதி மற்றும் தர்ப்பணம் செய்தனர்.தென்காசி மாவட்ட மக்கள் சட்டத்திற்கு கட்டுப்படும் வகையில் குற்றாலத்திற்கு செல்லவில்லை.அதே நேரத்தில் தங்களின் நம்பிக்கை மற்றும் சம்பிரதாயத்திற்கு கட்டுப்படும் வகையில் தென்காசி யானைப் பாலத்தில் தங்கள் கடமைகள் செய்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com