Home செய்திகள் வங்கிகள், திரையரங்குகள்,திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்ல அனைத்து வசதியும் ஏற்படுத்திட வேண்டும்- மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வங்கிகள், திரையரங்குகள்,திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்ல அனைத்து வசதியும் ஏற்படுத்திட வேண்டும்- மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

by mohan

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர்க்குழு கூட்டம் 06.02.2020  ரமேஷ் தியேட்டர் எதிரில் உள்ள அழகர்சாமி திருமண மண்டபத்தில் நகரத்தலைவர் காளீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சங்கத்தின் நகர செயலாளர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு…

பழனியில் மனநல காப்பகம் அமைக்க வலியுறுத்தி காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்களில் சிலர் தங்கள் இல்லங்களில் உள்ள மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை பழனியில் விட்டுச் செல்கின்றனர். சாலைகளில் அனாதையாக விடப்படும் இவ்வகை மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை தினசரி சந்திக்கிறார்கள்.

குறிப்பாக பெண் மாற்றுத்திறனாளிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே, பழனியில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு காப்பகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடியதன் பலனாக கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகம் அமைக்க 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. நிதி ஒதுக்கி மூன்று மாதம் கடந்த நிலையிலும் இன்னும் பழனியில் காப்பகம் அமைப்பதற்கான வேலைகளை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் துவங்கவில்லை. எனவே, உடனடியாக பழனியில் மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கான காப்பகத்தை துவங்க வலியுறுத்தி பழனியில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டி வருகிற 25.02.2020 அன்று நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வங்கிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தர வலியுறுத்தி மனு அளித்தல்..பழனிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் இல்ல விழாக்களை (திருமணம்) பழனியில் நடத்தவே ஆசைப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாளின்போதும் பழனி நகரமே திணறும் அளவிற்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் பல்வேறு திருமண மண்டபங்களில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாக்களில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள் இவ்வாறு வருகை தரும் பொதுமக்களில் மாற்றுத்திறனாளிகளும் வயதானவர்களும் அடக்கம். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் எந்த ஒரு மண்டபத்திலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளமோ அல்லது வெஸ்டர்ன் கழிப்பறை வசதிகளோ செய்து தரப்படவில்லை என்பது மிகவும் வேதனையான விசயமாகும்.

திருமணம் நடைபெற ஒரு நாள் வாடகையாக ஆயிரக்கணக்கில் கட்டணம் பெரும் திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதிகளை செய்து தராமல் இருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.எனவே, பழனியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்றும்,பழனிக்கு வருகைதரும் பக்தர்கள் தங்கள் பொழுதை போக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்களோ அல்லது படகு சவாரி, விளையாட்டு திடல் போன்ற எதுவும் இல்லை. பக்தர்களுக்கும் பழனி வாழ் பொதுமக்களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு மையம் திரையரங்குகள் மட்டுமே. இவ்வாறு தங்கள் பொழுதை போக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக பழனியில் ஒரு திரையரங்கம் கூட இல்லை என்பது வேதனையான விஷயம். எனவே, அனைத்து திரையரங்குகளிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்றும்,

பழனியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட தனியார் மற்றும் அரசு வங்கிகள் செயல்படுகின்றன. அனைத்து வங்கிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதிகள் செய்து தரப்படவில்லை.ஒரு சில வங்கிகள் மட்டுமே முறையாக கைப்பிடியுடுடன் கூடிய சாய்வுதள வசதி செய்து கொடுத்துள்ளன. எனவே, அனைத்து வங்கிகள் மற்றும் ATMகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து வசதிகளும் செய்து தர வலியுறுத்தி வருகிற 28.02.2020 அன்று மனு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com