மதுரையில் தேநீர் கடை உரிமையாளர் தலையை துண்டித்து படுகொலை-போலீசார் விசாரணை..

மதுரை கே. புதூர் பேருந்து நிலையம் அருகே ஆயர் பிரான் என்னும் டீக்கடை மற்றும் எண்ணெய் கடை நடத்தி வருபவர் மதுரை சூர்யா நகர் பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் முருகன்.

இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து கடையை திறப்பதற்கு இரு சக்கர வாகனத்தில் சக்தி நகர் பகுதிக்கு கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முருகனை வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முருகனை ஓட ஓட விரட்டி வெட்டியதில் முருகனின் தலை துண்டானது.

சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலை செய்த மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக முருகன் நிலம் வாங்கியதில் முன்விரோதம் இருந்துவந்துள்ள நிலையில் அதன் காரணமாக கொலை நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்