மதுரையில் மனைவி மீது சந்தேகப்பட்டு அம்மிக்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர் கைது..

மதுரை கரும்பாலை அருகே உள்ள பி.டி காலனியை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி பஞ்சவர்ணம். முருகன் நீண்ட நாட்களாக தன் மனைவி கள்ள தொடர்பு வைத்து இருப்பதாக சந்தேகப்பட்டு இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மனைவி பஞ்சவர்ணம் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 2, மணியளவில் அம்மிக்கல்லை மனைவியின் தலையில் போட்டு கொடூரமாக கொலைசெய்து விட்டு காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கணவன் முருகன், போதைக்கு அடிமையாகி மனைவியை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்ததாகவும் போதை தலைக்கேறிய நிலையில் நேற்று இரவு அம்மிக்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தது விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

மதுரை செய்தியாளர்: கனகமுனிராஜ்