வாடிப்பட்டி அருகேஅரசு மதுபானக்கடையில்காவலாளி கொலை. கொலையாளிகள் கைது.

மதுரை மாவட்டம்வாடிப்பட்டி அருகே ஜெமினிபட்டியில் அரசு மது பானக்கடைஉள்ளது. இங்கு கடந்த மாதம் 20 ம் தேதியன்று இரவில் கச்சைகட்டியை சேர்ந்தகாவலாளி கணேசன், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருகிலுள்ள தென்னந்தோப்பு கிணற்றுக்குள் கொலைசெய்யபட்டு கிடந்தார். மேலும் கடையை துளையிட்ட மர்மநபர்கள்10 மதுபான பாட்டில்களை திருடிசென்றனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாடிப்பட்டிபோலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியில்தனிப்படை போலீசார் போலீசார்வாகனசோதனை செய்த போது சந்தேகப்படும்படியாக வந்த 2பேரைபிடித்து விசாரித்ததில் அலங்காநல்லூர் நேதாஜிநகரை சேர்ந்த 17வயது சிறுவன், மதுரை அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலணியைசேர்ந்த சுப்பிரமணி மகன்செல்வகணபதி(19) என்றும், மதுரை மாவட்டத்தில் பலவழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும், கடந்த மாதம்வாடிப்பட்டி அருகே மதுபானக்கடை சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை திருடியபோது காவலாளி கணேசன் தடுத்ததால், அவரை கொலை செய்தோம் என்றும், சப்தம்போடாமல் இருக்க ஆடு, மாடு திருடுவதற்கு பயன்படுத்தும் டேப்பால்வாயில் மற்றும் கை, கால்களை கட்டி தூக்கி சென்று அந்த பகுதியில் உள்ள ஒருகிணற்றில் வீசிவிட்டு சென்றோம் என்று ஒப்புதல்வாக்குமூலம் அளித்தனர். இதில் 17வயது சிறுவனை இளஞ்சிறார் நீதிகுழுமத்திலும், செல்வகணபதியை வாடிப்பட்டி நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்