Home செய்திகள் அரசு சிறப்பு பொது மருத்துவ முகாம் முறையானவிளம்பரம் இல்லாததால் குறைவான பொதுமக்கள் கலந்து கொண்ட அவலம்:

அரசு சிறப்பு பொது மருத்துவ முகாம் முறையானவிளம்பரம் இல்லாததால் குறைவான பொதுமக்கள் கலந்து கொண்ட அவலம்:

by mohan

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் அரசு முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது விளம்பரம் இல்லாததால் குறைவான மக்கள் கலந்து கொண்டனர் . இதில் கிராம பொது மக்களுக்கு அரசு திட்டங்கள் நேரடியாக போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் கிராமம் தோறும் நடைபெற்று வருகிறது .இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது இந்த முகாம் நடப்பதற்கு முன்பாக முகாம் நடைபெறக்கூடிய ஊர் இடம் மற்றும் முகாமில் நடைபெறக்கூடிய சிகிச்சைகள் விவரம் ஆகியவற்றைஅந்தப் பகுதி மக்களுக்கு சுகாதாரத்துறையினர் விளம்பரம் செய்வது வழக்கம் . ஆனால் ,தற்போது நடைபெறக்கூடிய சிறப்பு மருத்துவ முகாம் பொதுமக்களுக்கு தெரியவில்லை என்று கூறி வருகின்றனர் இந்த சிறப்பு முகாமில் பரிசோதனை எக்ஸ்ரே இசிசி ஸ்கேன் மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும்சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொள்வார்கள் ஊட்டச்சத்துணவு துறையிலிருந்து மகளிருக்கான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள். தற்போது ,கொ ரோனோ தொற்று நோய் பரவல் காரணமாக கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர் இலவசமாக அனைத்து பரிசோதனைகளும் நடைபெறும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கி வருகின்றனர் .இந்த அளவுக்கு அரசு திட்டங்கள் ஒதுக்கீடு செய்து அடித்தட்டு மக்களிடம் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து வருகின்றனர் இதை சம்பந்தப்பட்ட அதிகாரி கலின் அலட்சியத்தால் சிறப்பு மருத்துவ முகாம் ஏனோதானோ என்று நடத்துகின்றனர் இதனால் கிராம பொது மக்கள் பயன் பெற முடியவில்லை எல்லா முகாமிலும் ஊட்டச்சத்து உணவிலிருந்து சத்தான உணவுப் பொருட்கள் கண்காட்சியாக வைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் விக்கிரமங்கலதில் நடந்த சிறப்பு மருத்துவ முகாம் கடமைக்கு கண்காட்சி வைத்து போட்டோ எடுத்து பின்னர் கண்காட்சியை மூடிவிட்டனர் .கபசுர குடிநீர் வைக்கப்பட்டிருந்து அதற்கான டம்ளரும் வைத்திருந்தனர் .இங்கு வந்த கிராம மக்கள் சிலர் டம்ளர் கழுவ தண்ணீர் வசதி செய்யாததால் , கபசுர குடிநீர் அருந்தாமல் சென்றுவிட்டனர். இப்பகுதி பல கிராமங்களை உள்ளடக்கியது சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . ஆனால் , விக்ர மங்கலத்தில் நடந்த மருத்துவ முகாமில் குறைந்த அளவில் பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் , இங்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை ஒரு சிலர் முக கவசம் அணிய வில்லை இதுகுறித்து, அவர்களுக்கு பணியாளர்கள் அறிவுறுத்தவும் இல்லை ஏன் முகாமில் வந்திருந்த சில பணியாளர்களும் முகக் கவசம் அணிய வில்லை கையுறை அணியவில்லை சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை யாம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பணியாளர்களே எந்தவித விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இனியாவது, நடக்கக்கூடிய சிறப்பு மருத்துவ முகாம்கலை பொது மக்களுக்கு முழுமையாக தெரியப்படுத்த விளம்பரம்செய்ய வேண்டும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் விதிகளை கடைபிடிக்க வேண்டும் வருகிற நோயாளிகளை அன்பாக நடத்த வேண்டும் மருந்து மாத்திரைகள் முறையாக வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com