இராமநாதபுரம் முகம்மது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்றுனர் கல்லூரியில் மாவட்ட அளவிளான தூய்மை பாரத இயக்க சார்பாக விழிப்புணர்வு போட்டிகள்..

தூய்மை பாரத் இயக்கம் Swachhta Hi Seva(SHS) 2018 இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக “தூய்மையே சேவை”  கொண்டாட்டம் 15.9.18 முதல் 2.10.18 வரை நடைபெற்றது. இதில் “தூய்மை பாரத கோடைக்கால தீவிர தூய்மை பணி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட அளவில் 22.9.18 அன்று தஸ்தகீர் ஆசிரியர் பயிற்றுனர் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் திரு. K.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக “தூய்மையே சேவை” திட்டத்தின் கீழ் திட  மற்றும் திரவ கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகிய தலைப்புகளில்  விழிப்புணர்வு  கருத்தரங்கம் மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டிகளை நடைபெற்றது. இந்நிகழ்வில்  முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் சுவரொட்டி விளக்கக்காட்சி போட்டியில் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் மாணவிகள் மூன்றாவது பரிசு பெற்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறந்த முறையில் பங்கேற்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் திரு. K. வீர ராகவ ராவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3.10.18 அன்று பரிசு வழங்கியும், நல்வாழ்த்துக்களுடன் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.