மக்கள் பாதை மகளிரணி சார்பாக பனை விதை விதைப்பு விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை மகளிரணி சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் இன்று இராமநாதபுரம் ஒன்றியம் கலையனூர் கிராமத்தில் பனை விதை விதைப்பு திருவிழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் பார்கவி தலைமை தாங்கி பனை விதை விதைப்பு திருவிழாவை தொடங்கி வைத்தார். மேலும் பனை சார்ந்த பொருளாதாரம் பற்றியும் , நமது மாவட்டத்தில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் திண்ணைபள்ளி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.திண்ணைதிட்ட பொறுப்பாளர் பிரீத்தி முன்னிலை வகித்து நெகிழியின் தீமைகள் பற்றியும், குளங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கலையனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..