Home செய்திகள் இராமநாதபுரத்தில் 469 பெண்களுக்கு திருமண நிதி உதவி.. தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

இராமநாதபுரத்தில் 469 பெண்களுக்கு திருமண நிதி உதவி.. தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உச்சிப்புளியில் நடந்த விழாவில் 469 பயனாளிகளுக்கு ரூ.2.93 கோடி மதிப்பில்  விலையில்லா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி, 82 மீனவர்களுக்கு ரூ.19.06 லட்சம் அரசு  மானியத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார்.

மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவயில் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன்  பேசியதாவது: பெண்கள்  நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும்  வகையில் ஏழை , எளிய பெண்களின் திருமண திருமாங்கல்யத்திற்கு விலையில்லா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண  நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 469 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 93 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் விலையில்லா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை  வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2018-19ம் நிதியாண்டில் இதுவரை 3,180 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 49 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் குந்துகால் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் மூக்கையூர்  பகுதியில் ரூ.113 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி துறை அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணத் தொகையாக படகுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 19 படகுகளுக்கு ரூ.95 லட்சம் நிவாரணத தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தரைதளம் மற்றும் மீன்பிடி குறைவு காலங்களில் மீனவர்கள் நலனுக்காக உதவித்தொகையாக  ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள்  பயன்பெறும் வகையில் 50 சதவீதம் அரசு மானியத்தில் மீனவர்களுக்கான குளிர்காய்ப்பு பெட்டிகள், 40 சதவீதம் அரசு  மானியத்தில் மீன்பிடி படகுகளுக்கு தேவையான இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 36 மீனவர்களுக்கு ரூ.10.07 லட்சம் அரசு மானியத்தில் மீன்பிடி படகுகளுக்கான  இயந்திரங்கள், 42 மீனவர்களுக்கு ரூ.0.99 லட்சம் மானியத்தில் குளிர்காப்பு பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம்  ரூ.8 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் மாணவ, மாணவியருக்கு கடந்த 5 ஆண்டுகளில்  39 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 15.50 லட்சம்  விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற  சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் ராமேஸ்வரம் பகுதி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்காலம் பெயரில் புதிய அரசு  கலைக்கல்லூரி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு  மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, மீன்வளத்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர்  வீ.கேசவதாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணா துரை, மீன்வளத் துறை உதவி இயக்குநர் கோபிநாத் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com