Home செய்திகள் பரமக்குடியில் 766 பெண்களுக்கு திருமண உதவி உட்பட ரூ.4.65 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்…

பரமக்குடியில் 766 பெண்களுக்கு திருமண உதவி உட்பட ரூ.4.65 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்…

by ஆசிரியர்

766 ஏழை பெண்களின் திருமண திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி உட்பட ரூ.4.65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் வழங்கினார். தமிழ்நாடு அரசின் படித்த ஏழை  பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் விலையில்லா தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 766 பெண்களுக்கு தலா 8 கிராம் திருமாங்கல்ய தங்கம் மற்றும் நிதியுதவி உட்பட ரூ.4.65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார்.

விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது: ராமாநாதபுரம் மாவட்டத்தில் 17.05.2011 முதல் 22.05.2016 வரை 22,902 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.96 கோடியே 70 லட்சத்து 97 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 23.05.2016 முதல் தற்போது வரை 4,700 பயனாளிகளுக்கு  தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.18 கோடியே 29 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.  இன்றைய தினம் பரமக்குடி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குடபட்ட  கிராமங்களைச் சார்ந்த 766 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.2.73 கோடி மதிப்பில்  நிதியுதவியும் வழங்கப்படுகிறது. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.  தமிழக அரசின் மூன்றாம் பாலினர் நல வாரியம் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள 10 மூன்றாம்  பாலினர்களுக்கு 2018-19ம் நிதியாண்டில் தொழில் வளர்ச்சி நிதியுதவியாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.2லட்சத்திற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண்களின் தன்னம்பிக்கையைஊக்குவிக்கும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) கீழ் உழைக்கும் மகளிருக்கு 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25,000 அரசு மானியத்துடன் 2017-18ம் ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,920 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1,454 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளை சிரமமின்றி கண்காணித்திட ஏதுவாக இம்மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு போஷன் அபியான்  திட்டத்தின் கீழ் விலையில்லா கைபேசிகள் வழங்கப்படுகின்றன. பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெண்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் டோல் ப்ரீ ‘181” தமிழ்நாடு முதல் வரால் 10.12.2018 இல் துவங்கப்பட்டது. இந்த எண் மூலம் உதவி தேவைப்படும் பெண்களுக்கு (காவல்துறை, ஒருங்கிணைந்த  சேவை மையம் மற்றும் மருத்துவமனை போன்ற உரிய அதிகார மையங்களுடன் தொடர்பு  கொள்ளும் வகையில் 24 மணி நேர அவசர கால அழைப்பை ஏற்கும் பொருட்டு  இக்கட்டணமில்லா தொலைபேசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2016-17ம் ஆண்டில்  ரூ.550 கோடி அளவில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு தாமதமின்றி  உடனடியாக வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார். மாவட்ட சமூக நல அலுவலர் சி.குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பெ.கிருஷ்ணவேணி,  முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.நிறைகுளத்தான் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com