கோவை மாவட்டம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டம் இன்று செயல்பட்டு வருகிறது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் அனைவரும் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி இருந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதுடன் நேரடியாக அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் ஆய்வு செய்து அங்குள்ள குறைகளை சரி செய்து தருவதற்காக முகாமிட்டுள்ளார்கள் நிகழ்ச்சியின் துவக்கம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது மற்ற நேரங்கள் போல் அல்லாமல் இன்று ஏறத்தாழ காலை எட்டு மணிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகளும் மேட்டுப் பாளையத்திற்கு வருகை தந்து விட்டார்கள் குறிப்பிட்ட நேரத்தில் இந்த சிறப்பு திட்டம் துவங்கியது இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் ராஜசேகர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று கல ஆய்வு செய்ததுடன் அங்கு சிகிச்சைக்கு வருகை தந்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததுடன் நோயாளிகளுடன் ஆறுதலாக பேசி சிகிச்சை அளித்தது அங்கு வந்திருந்த நோயாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனராக மருத்துவர் ராஜசேகர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்த ரத்தம் தரம் பிரிக்கும் இயந்திரம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார் மேலும் தலை சிகிச்சைக்காக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சிடி ஸ்கேன் இயந்திரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார் மேலும் வாரத்தில் இரு முறை யாரிடமும் அறிவிக்காமல் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருவதால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தற்போது மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது இதனால் மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதேபோன்று தொடர் நடவடிக்கை எடுத்தால் இன்னும் சிறிது காலத்தில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
64
You must be logged in to post a comment.