Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நிலக்கோட்டையில் விலங்குகள் நல கூட்டமைப்பு கூட்டத்தில் தேசியப் பறவையை காக்க பாதுகாப்பு குழு ஏற்படுத்த தீர்மானம்…

நிலக்கோட்டையில் விலங்குகள் நல கூட்டமைப்பு கூட்டத்தில் தேசியப் பறவையை காக்க பாதுகாப்பு குழு ஏற்படுத்த தீர்மானம்…

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விலங்குகள் நல கூட்டமைப்பு கூட்டம் மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கொண்டல் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள நாய் பூனை மயில் வாத்து மீன் புறா எலி அனைத்து வகையான விலங்குகளுக்கும் பாதுகாப்பு கொடுத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.            

* இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களின் இறகுக்காக, விவசாய நிலங்களை நாசம் செய்வதாக கூறி விஷம் வைத்து கொல்லும்  துயரச் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது இதை தடுக்க மயில்கள் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும்.

* அரசு வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் கிராம ஊராட்சி ,தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான  விலங்குகள் நல சங்கங்கள் ஏற்படுத்த வேண்டும்.

* பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில்  விலங்குகள் நலன் மற்றும் உரிமைகள் குறித்து முக்கியத்துவம் குறிப்பிடப்பட வேண்டும்.

* திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நாய்க்கடியால் ரேபிஸ் மற்றும் பல்வேறு தொற்று நோய்களை தடுக்க அனைத்து விலங்குகளுக்கும் மருத்துவமனைகளில் நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு,  மத்திய ,மாநில கட்சிகளுக்கும் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிலக்கோட்டை ஒன்றிய பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பிலுள்ள பெண்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முடிவில் நிலக்கோட்டை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கம்மாள் நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!