Home செய்திகள் அழகாக மழலை மொழியில் தேவாரம் பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி

அழகாக மழலை மொழியில் தேவாரம் பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி

by mohan

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற தேவாரம் ஒப்புவிக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற முத்தய்யன் , மெர்சி,ஐயப்பன்,இரண்டாமிடம்பெற்றயோகேஸ்வரன்,தேவதர்ஷினி,ஈஸ்வரன்,மூன்றாமிடம்பிடித்தலெட்சுமி,வெங்கட்ராமன்,கிருத்திகா, சிறப்பு பரிசு பெற்ற முதல் வகுப்பு மாணவி ரதிபிரதா உட்பட 43மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com