Home செய்திகள் மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக மாநில செயற்குழுக் கூட்டம்

மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக மாநில செயற்குழுக் கூட்டம்

by mohan

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை மாட்டுத்தாவணி தலைமை அலுவலகத்தில், நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையிலும்,பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர், பொருளாளர் வி.டி.பாண்டியன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அக்டோபர் 30,2019 அன்று நடைபெற்ற தேசியத் தலைவர் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் பசும்பொன்னில் நடைபெற்ற 21ஆம் ஆண்டு அறுசுவை அன்னதானத்தை துவக்கி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் இந்த செயற்குழு பாராட்டுதலையும், நன்றிதனையும் தெரிவித்துக் கொள்வதாகவும்,வர இருக்கிற தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் இடம் பெற வேண்டும் என்பதை கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதை இந்த செயற்குழு வரவேற்பதாகவும்,அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் மாநகராட்சி,நகராட்சி அமைப்புகளுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது என்றும், உள்ளாட்சித் தேர்தலில் கழகம் போட்டியிட வாய்ப்புள்ள இடங்களை அ.இ.அ.தி.மு.க தலைமையிடம் கேட்டுப் பெறவும்,சரியான வேட்பாளரை தேர்வு செய்யவும் கழக நிறுவனர் தலைவர் அவர்களுக்கு இந்த செயற்குழு கூட்டம் முழு அதிகாரம் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.மேலும் இந்திய இறையாண்மைக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது.இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே பிளவை உண்டாக்கி அதில் வாக்கு அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி அமைதி காக்க வேண்டும். அயோத்தியில் இருந்து அமைதி பரவட்டும். அயோத்தி தீர்ப்பு சரியா,தவறா என விவாதிப்பதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. நீதி தேவதைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். மதரீதியிலான விவாதங்களை தூக்கி எறியுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும், தேவர் திருமகனார் ஆலயத்திற்கான குடமுழுக்கு விழாவை வருகிற 2020ல் நடத்திட முடிவுசெய்யப்பட்டுள்ளது.ஆலய குடமுழுக்கு விழாவையும்,பசும்பொன்னில் அறம் செய்து பழகு என்கிற திட்டத்தின் கீழ் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் கட்டப்பட்டு வரும் அன்னதான மண்டப திறப்பு விழாவையும் ஒரே விழாவாக நடத்திட கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அவர்கள் எடுத்த முடிவை இந்த செயற்குழு வரவேற்கிறது. அன்னதான மண்டப திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர்,தமிழக துணை முதல்வர் ஆகியோரை அழைத்து பிரம்மாண்டமாக நடத்திட கழக நிறுவனர் பக்டர் சேதுராமன் எடுத்துள்ள முடிவிற்கு இந்த செயற்குழு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. தமிழக அரசு ஆறு,ஏரி,கண்மாய் போன்ற பகுதிகளில் மராமத்து நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம் தமிழகத்தில் சொற்பமழை பெய்திருந்த போதே ஆங்காங்கே மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது.மதுரை வைகை நதியில் கோரிப்பாளையம் பகுதியில் தடுப்புகள் கட்டி மழைநீர் சேகரிக்கப்பட்டதை அனைவரும் வரவேற்கிறோம்.மழைநீர் சேகரிப்பிற்கு தமிழக அரசு குறிப்பாக தமிழக முதலவர் எடுத்து வரும் நடவடிக்கைக்கு இந்த செயற்குழு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது. உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மண்டல செயலாளர் வேலுச்சாமி, மண்டல தலைவர் நாகராஜ்,மதுரை மாவட்ட செயலாளர் பகவதி, தலைவர் ஒச்சு தேவர்,துணைச்செயலாளர் வி.கே.ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் செய்திக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com