Home செய்திகள் நகை பறிப்பில் ஈடுபட்ட சில மணிநேரத்திலேயே குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினா்.

நகை பறிப்பில் ஈடுபட்ட சில மணிநேரத்திலேயே குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினா்.

by mohan

மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மனைவி பிரியா(38). இருவரும் நேற்று10.11.18 மாலை டூவிலரில் திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த போது திருப்பரங்குன்றம் மூட்டா காலணி அருகில் சென்ற போது நடந்து வந்த மர்ம நபர் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து அருகில் டூவிலரில் தயாராக இருந்த மற்றொரு மர்ம நபருடன் தப்பி சென்றார். இது குறித்து பிரியா கொடுத்த புகாரின் பெயரில் துரிதமாக நடவடிக்கை எடுத்து அனைத்து சோதனை சாவடிகளிலும் மைக் மூலமாக தகவல் கொடுத்து காவல்துறையினரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட சொல்லி நாகமலை புதுக்கோட்டை அருகே சந்தேகத்தின் பேரில் வந்த இருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதில் விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாக பதில் அளிக்கவே தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருப்பரங்குன்றம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட வருட என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது இதனை அடுத்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் மதுரை நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் அந்த செயின் பறிப்பு நபர்களை ஒப்படைத்தனர் நகை பறிப்பில் ஈடுபட்ட சில மணிநேரத்திலேயே குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com