Home செய்திகள் சாக்கடையில் விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் குழு.

சாக்கடையில் விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் குழு.

by mohan

மதுரை மாவட்டம் திருநகர் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ஒன்று இறை தேடி சென்று கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாக்கடை குறுகலான கால்வாயில் பசுமாடு தவறி கீழே விழுந்தது பசுமாடு கத்துவதை கண்ட அப்பகுதி மக்களும் மாட்டின் உரிமையாளர் பாசுவை மீட்க எவ்வளவோ முயற்சி செய்தனர் எனினும் பலனளிக்கவில்லை இதுகுறித்து மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கயிறுகளை கட்டி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி இடிபாடுகளில் சிக்கிய பசுவை உயிருடன் மீட்டனர் பசுவை பத்திரமாக மீட்டு தந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் மாட்டின் உரிமையாளர் நன்றியை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com