காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் வாகனத்தை மோதி படுகொலை செய்ததை கண்டித்து ஆறுதல் கூற சென்ற உத்தரபிரதேச மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி அவர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ள மோடி அரசை கண்டித்து மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வரதராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பிஜே காமராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, நீதி ராஜாராம், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்து குமார் பொதுச்செயலாளர்கள் போஸ்’ கிருஷ்ணகுமார், பகுதி தலைவர்கள் ஆர் எ சுந்தர்ராஜன், பூக்கடை கண்ணன், கோபிநாத், பிலிம் ராதாகிருஷ்ணன், வார்டு தலைவர்கள் ராஜராஜ சோழன், வீர வாஞ்சிநாதன், குமரகுரு, சக்திவேல், பெருமாள், மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..