இடிந்து விழும் நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.

திடீர் திடீரென இடிந்து விழும் கட்டடத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அச்சத்துடனே மருத்துவ பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிரை கையில் பிடித்து வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 16-ஆவது வார்டு மாநகராட்சிக்கு சொந்தமான ஆரம்ப சுகாதார நிலையம் டிபி ரோடு அன்சாரி நகரில் செயல்பட்டு வருகிறது இதில் தினசரி கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள் இந்த நிலையில் அந்தக் கட்டிடம் உள்ளது மேற்கூரை இடிந்து விழுந்து பல்வேறு பகுதிகளில் காங்கிரட் கம்பி தெரியும் அளவிற்கு உள்ளது மேலும் மழைக்காலம் என்பதால் கட்டிடம் எந்த நேரத்திலும் விழுந்து விடுமோ என அதில் கர்ப்பிணி பெண்களும் நோயாளிகளும் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் அச்சத்துடனேயே அங்கு வந்து செல்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் தற்போது தடுப்பூசி முகாம் நடந்து வருவதால் அவரும் தடுப்பூசி செலுத்த வரும் நபர்கள் கட்டிடத்தைப் பார்த்து ஐயத்துடன் தடுப்பூசி செலுத்தாமல் திரும்பி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது இடிந்த கட்டடத்தை உடனடியாக சரி செய்ய மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மாநகராட்சி நிர்வாகம் நோயாளிகளின் உயிர்களை காக்கும்??????

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..