அகில இந்திய மார்வாடி யூவா சங்கம் சார்பில்186 மாற்றுத்திறனாளிகளுக்கு 96 செயற்கை கால்கள் மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.

மதுரை மாவட்டம்,மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அகில இந்திய மார்வாடி யூவா சங்கம் சார்பில் 186 மாற்றுத்திறனாளிகளுக்கு 96 செயற்கை கால்கள் மற்றும் 90 முடநீக்கியல் சாதனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.இந் நிகழ்ச்சியில்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில்:-சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகவோ ஏதாவது ஒரு பாதிப்பினாலோ அல்லது குறைபாட்டின் காரணமாக கொஞ்சம் பின்தங்கி பலவீனமாக மற்றும் திறன் குறைந்து காணப்படுகின்றவர்களுக்கு ஒரு சமுதாயம் எவ்வாறு அவர்களை அணுகி உதவி செய்கிறது என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படைநோக்கமாகும். இவற்றையெல்லாம் நன்கு அறிந்தவர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.மு.கருணாநிதி. இவர்களுக்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்து, அத்துறையை முழுமையாக கண்காணித்து சிறப்படையச் செய்து வருகிறார்.சமூக நல ஆர்வலர்களுக்கு இருக்கின்ற நிர்வாகத் திறனும் நிதியை பயன்படுத்துவதில் இருக்கின்ற கட்டுப்பாடும் கவனமும் சமுதாயத்துக்கு பயனடையக் கூடியவை. ஏனென்றால், அவர்களை சுற்றி இருக்கக் கூடிய இடத்தில் மற்றும் தெரிந்த இடத்தில் வசிப்பவர்களை கண்டறிந்து அவர்களுடைய நிர்வாகத் திறனையும் சமூக ஆர்வத்தையும் பயன்படுத்தி அதனடிப்படையில் , ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கருவி என்ற அளவில் பயன்பெறச் செய்வது என்பது அரசாங்கத்தை விட சிறப்பாக செய்யக்கூடிய செயலாகும். இச்செயல் முற்றிலும் தனிநபர்களுடைய ஆர்வமும் ,நிதியும் சங்கத்தினைடைய வரலாறு கட்டமைப்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இப்பணியினை, தொடர்ந்து செய்து வரும் அகில இந்திய மார்வாடி யூவா சங்கத்தினரை மனதார பாராட்டுகிறேன்.இந் நிகழ்ச்சியில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.செந்தில்குமாரி மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர்ரவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..