Home செய்திகள் ஸ்மார்ட் சிட்டி ஆலோசணைக் கூட்டம்.

ஸ்மார்ட் சிட்டி ஆலோசணைக் கூட்டம்.

by mohan

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழுக் கூட்டம் அறிஞர் அண்ணா மாளிகை ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கு கூடத்தில், ஆலோசனைக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், தலைமையில் இணைத் தலைவர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்;த்திகேயன், ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது.மதுரை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழச் சந்தையினை மாற்றியமைத்தல் பணி ரூ.12 கோடி மதிப்பீட்டிலும், பெரியார் பேருந்து நிலையம் அருகில் சுற்றுலா மையம் அமைத்தல் பணி ரூ.2.75 கோடி மதிப்பீட்டிலும், குழல் வகையிலான தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மேம்படுத்துதல் பணி ரூ.30.25 கோடி மதிப்பீட்டிலும், புராதன சின்னங்களை மேம்படுத்துதல் பணியின் கீழ் குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம், ஜான்சிராணி பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை மையம், விளக்குத்தூண், பத்துத்தூண் பகுதிகளை மேம்படுத்துதல், திருமலை நாயக்கர் மகால் சுற்றுப்புறத்தில் பூங்கா அமைத்தல், நான்கு சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதித்தல், புராதான வழித்தடங்களில் அலங்கார தூண்களுடன் எல்.இ.டி. விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.27.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவுற்று உள்ளது.மேலும் ,பெரியார் பேருந்து நிலையத்தினை மேம்படுத்துதல், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், வைகை ஆற்றில் கரையோர பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் சாலையினை அகலப்படுத்துதல், நான்கு மாசி வீதிகளில் சிறப்புச்சாலை திட்டம், திடக்கழிவு மேலாண்மை பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 15 வார்டு பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்கு புதிய குழாய்கள் பதித்தல், வைகை வடகரை பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பினை ஏற்படுத்துதல், தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் கட்டுதல், அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் என ரூ.809.08 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள்கோ.தளபதி,பூமிநாதன், வி.வி.ராஜன் செல்லப்பா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர்என்.ஜெகதீசன்,கே.சக்திவேல், (தலைமைபொறியாளர் ஓய்வு), கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்கத் தலைவர்பி.என். ரகுநாதராஜா, மதுரை பென்னிகுயிக் அரிமா சங்கம் தலைவர்சஞ்சய், நகரப்பொறியாளர்(பொ)சுகந்தி, மக்கள் தொடர்பு அலுவலர்சாலிதளபதி,மகேஸ்வரன், செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!