மொத்த பழங்கள் வியாபாரிகளால் பாதிக்கப்படும் சில்லரை விற்பனையாளர்கள்.

மதுரை மாநகர் யானைக்கல் பகுதியில் மொத்த பழ வியாபாரிகளால் சில்லரை விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி சில்லரை விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ளது ஒருங்கிணைந்த பழ சந்தை. இங்கு மொத்த வியாபாரிகள் மதுரை மாவட்டம் மற்றும் அருகேயுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்களுக்கு பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இவர்களிடம் பழங்களை மொத்த விலைக்கு வாங்கி வந்து மதுரை மாநகரின் குறிப்பாக யானைக்கல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.மதுரை மீனாட்சி கோயில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த பழ வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். அப்பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒருங்கிணைந்த பழ சந்தை மதுரை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு அங்கு மொத்த வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் யானைக்கல் பகுதியிலோ அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளிலோ மொத்த வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மொத்த வியாபாரிகள் சில்லரை விற்பனையை மேற்கொண்டு வருவதால், சில்லரை விற்பனையை நம்பியுள்ள பழ வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டீஸ்வரி கூறுகையில், மொத்த வியாபாரிகளுக்காக தனி சந்தை அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் சில்லரை விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மொத்த வியாபாரிகள் சிலர் சூறையாடி வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சியிடமும் காவல்துறையிடமும் புகார் அளித்தும் கூட எந்தவித நடவடிக்கையும் இல்லை. யானைக்கல் மற்றும் வக்கீல் புதுத்தெரு பகுதியில் மட்டும் 300 சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு இது ஒன்றுதான் வாழ்வாதாரம் இந்த நிலையில் மொத்த விற்பனையாளர்களை இங்கு விற்பனை செய்ய அனுமதிப்பது விதிமுறை மீறிய செயலாகும் என்றார்.யானைக்கல் பகுதியில் கடை வைத்துள்ள சில்லரை விற்பனையாளர்கள் கூறுகையில், கொரொண பெரும் தொற்று ஊரடங்கிற்குப் பிறகு மொத்த விற்பனையாளர்கள் இப்பகுதியில் தங்களது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி வருகின்றனர். இதனால் எங்களது விற்பனை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் எங்களுக்கு தருகின்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் நேரடியாக தருகின்ற காரணத்தால் எங்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு நேரிடுகிறது. சில நேரங்களில் பழங்களை விற்பனை செய்ய முடியாமல் பழங்கள் அழுகி தெருவில் கொட்டி விட்டு செல்கின்றோம். இதனை உடனடியாக மதுரை மாநகராட்சி கவனத்தில் கொண்டு எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர்… சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமாறு

செய்தியாளர் விகாளமேகம் மதுரை மாவட்டம்