
இந்திய ரயில்வே, சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல், இருப்பதால்இந்திய ரயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர்.இதனை சுட்டிக்காட்டி, அவற்றை இயக்கிட ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். ரயில்வே அமைச்சரை, நானும் வடசென்னை எம் .பி. கலாநதி வீராச்சாமியும் நேரில் வலியுறுத்தினோம்.இப்போது ,ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள ரயில்வே பயணி போக்குவரத்துஅதிகாரிகளை பயணி வண்டிகளை மெமு,டெமு, பாரம்பரிய பழைய பயணி வண்டிகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தி ட வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும், அவற்றுக்கான கால அட்டவணைகளை 16. 8. 2021 குள் அனுப்பி வைத்திடவும் ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வேக்களையும் கோரியுள்ளது.தெற்கு ரயில் வேயில் பயணி போக்குவரத்து அதிகாரி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் அதற்கான கால அட்டவணைகளை தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார் .அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர்.விரைந்து பயணி வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.ரயில்வே அமைச்சருக்கு, எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.