
மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இன்று மதுரை தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் தெப்பக்குளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு பொறுப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடலை மிதந்து கொண்டு இருந்த உடலை மீட்டனர் யார் என்ன என்பதற்கான விவரத்தை தெப்பக்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.தொடர்ந்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.