மதுரையில் அமையவேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் சுற்றுச்சுவரோடு நிற்கும் நிலையில் அதனை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது எய்ம்ஸ் பிரிக்ஸ் என்ற பெயரில் செங்கல் ஏற்றி செல்லும் லாரி புகைப்படமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளதுமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2022க்குள் எய்ம்ஸ்க்கான பணிகள் நிறைவு பெறும் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் சுற்றுச்சுவரோடு பணிகள் மந்த நிலையில் உள்ளன.ஒரு புறம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வழங்கும் ஜப்பானிய ஜைகா நிறுவனத்தோடு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை என ஒன்றிய அரசு பதிலளித்து இருந்தது.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமையவில்லை என்பதை சுட்டிக்காட்டி செங்கலை தூக்கிக்கொண்டு பரப்புரை மேற்கொண்டார். அந்தப் பரப்புரை பல்வேறு வகையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் வலைதள வாசிகள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த பல்வேறு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.இதற்கிடையே ‘எய்ம்ஸ் பிரிக்ஸ்’ என்ற பெயரில் செங்கல் ஏற்றும் லாரி ஒன்றின் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.