மதுரையில் 125 சிலம்ப குழந்தைகள் இணைந்து 10 மணி நேரம் ஒரே கையால் சிலம்பம் சுழற்றி சோழன் உலக சாதனை.

மதுரை வேளாண்மை கல்லூரிவிளையாட்டு மைதானத்தில்தமிழக அரசு வலியுறுத்தும், கொரானா தடுப்பு ஊசியை மக்கள் அனைவரும்செலுத்தி கொள்ளவும் அதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒத்தக் கடை இயற்கை பாதுகாப்பு இயக்கம் மற்றும் ராஜ சிலம்ப கலைக்கூடம் பயிற்சி ஆசிரியர்கள் எஸ்.எம்.மணி , பாண்டி ஆகியோர் இணைந்து 7 வயது முதல் 16 வயது வரையிலான125 சிலம்ப குழந்தைகள் இணைந்து பங்கேற்கும் 10 மணி நேரம் ஒற்றை கையால் சிலம்பம் சுழற்றி சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.இந்த சோழன், உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக , அதிகாலையில் இருந்தே சுமார் 125 சிலம்ப குழந்தைகள் கையில் சிலம்பத்துடன் தங்கள் பெற்றோர்களுடன்வேளாண்மை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.இதனைத் தொடர்ந்து, சிலம்பம் பயிற்சி ஆசிரியர்கள் எஸ்.எம்.மணி , பாண்டிஆகியோர் முன்னிலையில், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர்ஏ.பி.ரகுபதி தலைமையில் சிறப்பு விருந்தினராக வேளாண்மை கல்லுாரி முதல்வர் பால்பாண்டி கலந்து கொண்டு, 125 சிலம்ப குழந்தைகள் பங்கேற்கும் சிலம்ப நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.நிகழ்ச்சியின், இறுதியில்’சோழன் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்டுநிறுவனத்தின் தலைவர் டாக்டர்.நிமலன் நீலமேகம்,125 சிலம்ப குழந்தைகள் இணைந்து இன்று காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 7.00 மணி வரை 10 மணி நேரம் ஒரே கையால் சிலம்பம் சுழற்றிய நிகழ்ச்சியை சோழன் உலக சாதனையாக செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.இதனை த்தொடர்ந்து, சோழன் உலக சாதனை படைத்த அனைத்து குழந்தைகளுக்கும்பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.இந் நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய துணை சேர்மன் ஏ.பி.பாலாண்டி , ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். முருகேஸ்வரி சரவணன் , திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.ஆர் அண்ணாமலை , கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர்திருப்பதி , உடற்கல்வி துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார்ஒத்தக் கடை ‘ இயற்கை பாதுகாப்பு இயக்கம்’ மற்றும் ‘ ராஜ சிலம்ப கலைக்கூடம் ‘ நண்பர்கள் உள்ளிட்டஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்