
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை, எரிபொருள் தயாரிக்க வழங்கும் திட்டம் (RUCO) முதல் முதன் முறையாக இன்று தொடங்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெய் பயோ டீசலாக மாற்ற சேகரிக்கப்பட்டது. மதுரையில் இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் இதுவரை 92 ஆயிரம் லிட்டர் சேகரிக்கப்பட்டு, அதில் 75 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் எரிபொருளாக மாற்றப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.