தொழிற்சாலைகளில் குழந்தை களை பணி அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை .

சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமம் உட்கடை தேன்காலனி அருகே உள்ள நீராத்துலிங்கம் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக சிவகாசி உதவி ஆட்சியர் வரப்பெற்ற தகவலினை தொடர்ந்து, சிவகாசி உதவி ஆட்சியர் தலைமையில் 14.07.2021 அன்று மதியம் 01.45 மணியளவில் திடீர் தணிக்கை செய்த போது மேற்படி பட்டாசு ஆலையில் சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமம் அய்யம்பட்டியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பணிபுரிந்து வந்தது கண்டறியப்பட்டு, மேற்படி சிறுவர்கள் சிவகாசி உதவி ஆட்சியர் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும், மேற்படி குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை மற்றும் பொருளாதார உதவிகள் செய்ய (NCLP) தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்டம் அலுவலரிடம் சிவகாசி உதவி ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விசாரணை செய்ததில் மேற்படி தொழிற்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாக நடுவரின் செயல்முறை ஆணைகள் ந.க.இ4/6771/2021, நாள்: 19.03.2021 – ன் படி, படிவம் – II உரிமம் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டு இருந்ததை மீறி பணி நடைபெற்றதும் கண்டறியப்பட்டது. மேற்படி ஆலையில் ஆய்வின்போது 35 பெண்கள், 20 ஆண்கள் சரம் மற்றும் குண்டு தயாரிக்கும் பணிகளை செய்து வந்தனர்.சிவகாசி உதவி ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, மேற்படி பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, மேற்படி ஆலையின் உரிமையாளர் நீராத்துலிங்கம், த/பெ.அய்யநாடார் மற்றும் போர்மேன் கருப்பசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைகளை தொழிலாளர்களாக பணி அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி .தெரிவித்துள்ளார்கள்

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..