
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் சந்தித்து, அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிய வந்த தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன், தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்த போது, தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பேசுவதற்காக மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனை அழைத்ததாக தெரிகிறது. அவர் வர மறுத்த நிலையில், நேரில் வர வேண்டும் என ஆணையத் தலைவர் அழைத்தார். இருவரிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில், ஆணையாளர் வர மறுத்த நிலையில் ஆணையாளர், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தை அவமதித்தாக கூறி தூய்மை பணியாளர்களோடு இணைந்து மாநகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,ஆணையர், தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவரோடு சேர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கில் கூட்டத்தை நடத்த கூறியதையடுத்து, மாநகராட்சி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனால், மதுரை மாநகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.