Home செய்திகள் மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி முதியோர் இல்லத்திற்கு உதவி.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி முதியோர் இல்லத்திற்கு உதவி.

by mohan

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனிடம் புதுச்சேரியில் உள்ள பிஎஸ்டி முதியோர் இல்லம் கொரோனா ஊரடங்கில் மிகுந்த சிரமத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.இந்த இல்லம் புறநகர் பகுதியில் உள்ளதால் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மற்றும் சேவகர்கள் உணவு பொருட்கள் வழங்குவது மிகவும் குறைந்தவிட்டது.இந்த சூழலில் இங்குள்ள முதியோர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் சிரமத்தில் இருப்பது தெரிந்தது.இதனையடுத்து மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் ஐந்து மூடை அரிசிக்கான உதவித்தொகை வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.இதனை பெற்றுக்கொண்ட புதுச்சேரி முதியோர் இல்ல பொறுப்பாளர் அமுதா வழிகாட்டி மணிகண்டனின் முயற்சிகளுக்கு மிகுந்த நன்றி தெரிவித்தார்.இல்லத்தில் வாழும் முதியோர்களும் தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com