Home செய்திகள் இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இருதய நோய் மற்றும் பக்கவாத நேர்வுகள் 50% அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இருதய நோய் மற்றும் பக்கவாத நேர்வுகள் 50% அதிகரிப்பு

by mohan

மனிதர்களின் உயிரிழப்புக்கு முதன்மையான காரணமான இருதய நாள நோய்கள் உருவெடுத்திருக்கின்றன. உலகளவில் அனைத்து உயிரிழப்புகளில் இதன் பங்கு 31 சதவிகிதமாகும். பெரும்பாலான இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தினால் ஏற்படுகின்றன. உலகளவில் 2015 ஆம் ஆண்டில் தொற்றா நோய்களின் காரணமாக உரிய காலத்திற்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்த (70 வயதிற்கு கீழே) உயிரிழப்புகளில் 82% குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்ந்தன மற்றும் இவற்றுள் 37 சதவிகிதம் இரத்தநாள நோய்களினால் ஏற்பட்டவையாகும். எனினும், இதற்கு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத்தான் செய்கிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பருமன், உடல்சார் உழைப்பு / பயிற்சியின்மை மற்றும் ஆபத்தான அளவிற்கு மதுபானப் பயன்பாடு ஆகிய இடர்காரணிகளை மக்கள்தொகை முழுவதிற்குமான செயல்யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலான இருதய நாள நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். உலக இருதய தினம் அனுசரிக்கப்படுவதற்கு முன்னோட்ட நிகழ்வாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையைச் சேர்ந்த புகழ்பெற்ற இருதய மருத்துவ நிபுணர்கள் இதை சுட்டிக்காட்டுகின்றனர்.

இருதய நாள நோய்களினால் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் அவர்களது இருதய த்தை சிறப்பாக கவனித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மருத்துவமனையைச் சேர்ந்த இருதய நல மருத்துவர்களும் மற்றும் இருதய வியல் அறுவைசிகிச்சை நிபுணர்களும் பேசினர். டாக்டர். கணேசன், டாக்டர். எஸ். செல்வமணி, டாக்டர். சம்பத்குமார், டாக்டர். ஜெயபாண்டியன் (இருதய சிகிச்சை நிபுணர்), டாக்டர். கிருஷ்ணன் (இருதய அறுவைசிகிச்சை நிபுணர்) டாக்டர். எஸ். குமார் (இருதய மயக்கவியல் நிபுணர்) ஆகியோர் உரையாற்றிய நிபுணர்களுள் சிலராவர்.

இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர். கணேசன் பேசுகையில், “கடந்த 25 ஆண்டுகளில் இருதய நாள நோய்களின் நிகழ்வு அச்சுறுத்தும் வகையில் இந்தியாவில் அதிகரித்துள்ளது மற்றும் இந்நாட்டில் உயிரிழப்பின் முதன்மை காரணமாக அது இருக்கிறது. சிவிடியின் காரணமாக இந்தியாவில் உரிய வயதிற்கு முன்பே இறப்பின் காரணமாக இழக்கப்பட்ட வாழ்நாள் காலத்தின் அளவானது 62.5 மில்லியன் ஆண்டுகள் என 2016 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டில் மொத்த உயிரிழப்புகளில் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய இரண்டின் ஒட்டுமொத்த பங்களிப்பானது, 28.1 சதவிகிதமாகும். இதுவே, 1990 – ல் 15.2 சதவிகிதமாக இருந்தது. அதாவது, வெறும் 25 ஆண்டுகளில் இருதய நோய் மற்றும் பக்கவாத நேர்வுகள் 50 சதவிகித்திற்கும் மேல் அதிகரித்திருக்கின்றன என்பதே இதன் அர்த்தமாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. 1990-ல் 2.57 கோடி என்ற அளவில் இருந்த இருதய நாள நோய்கள் நேர்வின் எண்ணிக்கை, 2016 – ல் 5.45 கோடியாக உயர்ந்திருக்கிறது. கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்நோய் நேர்வுகளின் எண்ணிக்கை மிக அதிகமாகும் மற்றும் அதைத்தொடர்ந்து, ஆந்திரபிரதேஷ், ஹிமாச்சல பிரதேஷ், மகாராஷ்டிரா, கோவா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன,” என்று கூறினார்.

சிவிடிக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ். செல்வமணி “புகையிலை பயன்பாட்டை நிறுத்துவது, உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்வது, அதிக பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது, வழக்கமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஆபத்தான மதுபான பயன்பாட்டை தவிர்ப்பது போன்றவை இருதய நாள நோய்க்கான இடரை குறைப்பதில் உதவுகின்றன. இதற்கும் கூடுதலாக, நீரிழிவு, உயர்இரத்தஅழுத்தம் மற்றும் உயர்இரத்த கொழுப்பு அளவு ஆகியவற்றிற்கு மருந்துகளின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் இருதய நாள நோய் இடரை குறைப்பதற்கும், மாரடைப்புகள் மற்றும் பக்கவாதம் நிகழாமல் தடுப்பதற்கும் அவசியமாக இருக்கின்றன. இரத்தநாள நோயினால் முன்கூட்டிய உயிரிழப்பு மற்றும் திறனிழப்பை குறைப்பதற்கு தனது உள்ளுர், பிராந்திய, தேசிய அளவிலான சுகாதார அமைப்பு முறைகளை வலுப்படுத்துவதும், ஒருங்கிணைப்பதும் அவசியமாகும். அதே நேரத்தில் மக்கள்தொகை அளவிலான இது குறித்த கொள்கைகளை இந்தியா அமல்படுத்துவதும் தேவைப்படுகிறது,” என்று கூறினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com