Home செய்திகள் தத்தனேரி மூலக்கரை மயானங்களில் ஒரு மாத காலத்திற்கு இறந்தவர்களின் உடலை எரியூட்ட கட்டணம் கிடையாது – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

தத்தனேரி மூலக்கரை மயானங்களில் ஒரு மாத காலத்திற்கு இறந்தவர்களின் உடலை எரியூட்ட கட்டணம் கிடையாது – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

by mohan

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் ஊழியர்கள் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்றது.இதில் நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கலந்து கொண்டுமுகாமை பார்வையிட்டனர்.இம்முகாமில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் ஆர்வமுடன் குடும்பத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.தொடர்ந்து பேட்டியளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் குடும்பத்தினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொரானாவைரஸ் பெரும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மதுரை மாநகராட்சி மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து தத்தநேரி மூலக்கரை மயானங்களில் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக எரியூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.இந்த முகாமில் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் மாநகராட்சி ஆணையாளர் விஷாகன் மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் நகர சுகாதார அலுவலர் குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com