விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சமூக ஆர்வலரும் மாப்பிளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் இரண்டு நவீன இயந்திர தெளிப்பான் கருவிமூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியினை, இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.இந்த நவீன கருவி மூலம் தனியார் பள்ளி வளாக மைதானத்தில் புதிதாக மாற்றபட்ட காய்கறி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகம் கூடுவதால் கிருமிநாசினி தொளிக்கப்ட்டது.மேலும் இராஜபாளையம் நகர், காந்தி சிலை ரவுண்டானா, மதுரை ரோடு மற்றும் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தொளிக்கப்பட்டன.சமூக ஆர்வலர் ராமராஜ் தனது சொந்த செலவில் இரண்டு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.