மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள தனியார் மஹாலில் திருமங்கலம் கல்லுப்பட்டி சாந்திநிகேதன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது .38 வருடங்களுக்கு முன் 1982 – 83 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.முன்னாள் மாணவர் சங்க தலைவர் காந்தி ராஜ், செயலாளர் பிரபாகர், துணை தலைவர் ஜெயகுமார், துணை செயலாளர் முருகேஸ்வரி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டரை்.பழைய மலரும் நினைவுகளை ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல் ஆகியவற்றுடன் சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவில்பட்டியை சேர்ந்த பேராசிரியர் ஜோசப் 38 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பழைய அலுமினிய பெட்டி மட்டும் பழைய ஜாமென்ட்ரி பாக்ஸ் நூல் நூற்கும் கண்டு ஆகியவை எடுத்து காண்பித்து தனது பழமையை நினைவு கூர்ந்தார்.முன்னாள் மாணவர்கூறும்போது எனக்கு இன்றும் வீட்டில் நானே பாத்திரத்தை கழுவுவேன். தரையை பெருக்கி சுத்தம் செய்வதற்கு காந்தி நிகேதன் பள்ளியின் பழக்கம் தான் என கூறினார்.மேலும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து டிரஸ்ட் அமைத்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய தீர்மானம் நிறைவேற்றினர்.முடிவில் ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.