மருத்துவமனை வளாகம் மர்ம கும்பலால் உடைக்கப்பட்ட சிசிடிவி காட்சி.

மதுரை கே புதூர் அருகே உள்ள பிரபல எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது.இதன் நுழைவாயில் சுவற்றினை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது அதோடு காரை பயன்படுத்தி அந்த சுவற்றில் மோதி உடைத்தனர்.இந்த காட்சிகள் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.இவற்றை கைப்பற்றியஎலும்பு மருத்துவமனை மருத்துவர் ஜேசி கணேசன் புதூர் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு புகார் அளித்தார்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்தற்போது மருத்துவமனை வளாகம் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்படும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்