Home செய்திகள் மதுரை அரசு அச்சகத்தில் திடீர் தீ விபத்து. 2லட்ச ரூபாய் மதிப்புள்ள பேப்பர் ரோல்கள் எரிந்து நாசம்..

மதுரை அரசு அச்சகத்தில் திடீர் தீ விபத்து. 2லட்ச ரூபாய் மதிப்புள்ள பேப்பர் ரோல்கள் எரிந்து நாசம்..

by mohan

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் இயங்கி வருகிறது அரசு அச்சகம்.இங்கு காவல் துறையினருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தேவையானற்றை அச்சடித்து கொடுத்து வருகின்றனர்.தமிழ்நாடு பேப்பர் லிமிடெட் கம்பெனியில் இருந்து ஒரு லாரி மூலம் பேப்பர் ரீல்கள் கொண்டு வரப்பட்டு இன்று மதியம் இறக்கும் போது மின் வயரில் உரசி தீப்பிடித்தது.

இதில் 10க்கும் மேற்பட்ட பேப்பர் ரீல் கள் தீயில் எரிந்து கருகின. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதை கவனித்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்த தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர்.மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.அண்ணாநகர் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com