Home செய்திகள் சிகிச்சைக்கு சென்ற புதுமாப்பிள்ளை ஊசி போட்டதில் மாயங்கி விழுந்து உயிரிழப்புர. உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டம்.

சிகிச்சைக்கு சென்ற புதுமாப்பிள்ளை ஊசி போட்டதில் மாயங்கி விழுந்து உயிரிழப்புர. உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டம்.

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் ஏகேஜி நகரில் வசித்து வரும் முனியசாமி என்பவரின் மகன் முகேஷ் (வயது 24) .இவருக்கும் இவரது தாய்மாமா மகள் பூபாலா -வுக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை மாதம் ஆகி உள்ளது. இந்நிலையில் இன்று காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவுடன் கடந்த 21ம் தேதி தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று உள்ளார். அங்கிருந்த மருந்துவர் எழுதி கொடுத்த மருந்தை செவிலியர் எடுத்து ஊசி போட்டுள்ளார். உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவர் வேறு ஊசி போட்டுள்ளார். உடனே உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்து உடனடியாக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனையடுத்து கூட்டுறவு மருத்துவமனை முன்பு திரண்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தலைவர் காவல் நிலைய போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதினார். இதில் இறந்த முகேஸ்-ன் குடும்பத்திற்க்கு அரசு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும், கூட்டுறவு மருத்துமனைக்கு முறையான தகுதி வாய்ந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டுமெனவும், மேலும் இறந்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி தவறான ஊசி செலுத்தி இருந்தால் தவறு செய்தவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து சமரச பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றன்ர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com