இராஜபாளையம் பகுதியில் தள்ளுவண்டி மாடல் ஆகும் அரசு பேருந்துகள். பயணிகள் அவதி.

ராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு பேருந்துகள் மிகவும் பழமையானதாக உள்ளது. இன்று பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மேலாண் மறைநாடு செல்லும் அரசு பேருந்து பேருந் நிலையத்திலேயே பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் நேரத்திற்க்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு வழியாக அருகிலிருந்த ஓட்டுனர்கள் நடத்துனர்கள் சேர்ந்து தள்ளி விட்டு பேருந்தை இயக்க வைத்தனர். இந்த நிகழ்வை பார்த்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது இது போன்ற நிகழ்வுகள் ராஜபாளையம் பகுதியில் தொடர் கதையாக நிகழ்ந்துவருகிறது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய பேருந்துகள் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்