Home செய்திகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து திருச்சியில் உள்ள முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட யானை. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து திருச்சியில் உள்ள முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட யானை. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

by mohan

அந்தமானை சேர்ந்தவர் மா சாங் இவர் மதுரையை சேர்ந்த இந்திரா என்பவருக்கு கடநத 2007 ம்ஆண்டு மாலாச்சி என்ற பெண் யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். ஆனால் அன்பளிப்பாக வாங்கிய யானையை தெருக்களில் பிச்சையெடுக்க விட்டதால் சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மாலாச்சி யானையை துன்புறுத்துவது மற்றும் பிச்சையெடுக்க வைத்தது உறுதி செய்யப்பட்டதால் உயர்நீதிமன்றம் இந்த யானையை திருச்சியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான யானைகள் முகாமிற்க்கு மாலாச்சி யானையை கொண்டு சென்று வனத்துறையிடம் ஒப்படைக்க கடந்த ஜீன் மாதம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த யானைக்கு நோய் தாக்குதல் இருப்பதாக கூறி யானையை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்திருந்தனர். அந்த யானைக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வனத்துறை பாதுகாப்பு போடப்பட்டு தினமும் இரண்டு வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். யானையின் உடல்நிலை குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது இந்த நிலையில் யானையின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் இருப்பதால் நேற்று வனத்துறையினர் இந்த யானையை திருச்சியில் உள்ள முகாமுக்கு கொண்டு சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com