உலக வல்லரசு நாடுகளை காட்டிலும் இந்தியாவில் விலையில்லா கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி சுகாதார பணியாளர், மருத்துவர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியான தாரபட்டியில் நிலையூர் கால்வாய் செல்லும் பாலம் மிகவும் பாழடைந்து பராமரிப்பின்றி காணப்படுவதால் புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனை அடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்ரூ.25 லட்சம் மதிப்பில் நிலையூர் கால்வாய் செல்லும் புதிய பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ , மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட தாராபட்டியில் ரூ 25 லட்சம் மதிப்பீட்டில் நிலையூர் கால்வாயை கடக்க புதிய பாலம் அமைக்கும் பணிக்காக பூமி பூஜையை இன்று தொடங்கி வைத்துள்ளோம்வைகையாற்றின் குறுக்கே ரூ18 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு நிலையூர், கொடிமங்கலம், மாடக்குளம், தேனூர் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை தேக்கி குடிநீர் ஆதாரத்தை உயர்த்தியுள்ளோம்இது தமிழக அரசின் குடி மராமத்து திட்டத்தின் வெற்றி என்றார்234 தொகுதியிலும் வெற்றி பெறுவேன் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறி வருவது முழுவதும் பொய் தான்,அவரது தங்கை, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகின்றனர்எதிர் கட்சி தலைவர் ஸ்லின் அவர்கள் 234 தொகுதியிலும் அவரது சின்னத்தில் மட்டுமே நின்று ஜெயிக்க முடியுமா சவாலா ஏற்று கொள்வாரா ஸ்டாலின் என்றார்தி மு க கூட்டணியில் உள்ள அனைவரும் நீறு பூத்த நெருப்பாக தான் உள்ளனர் அவர்களுக்குள் கூட்டணியில் உரசல் உள்ளதுபதவிக்காக ஸ்டாலின் மு.க.அழகிரி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்குமே உட்கட்சி மோதல் இருக்கத்தான் செய்யும் அதை பற்றி பேச விருப்பமில்லை என்றார்பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.2500 ஐ இன்னும் 3.50 லட்சம் பேர் வாங்கவில்லை அதனை வருகிற 25ம் தேதி வரை வாங்கி கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளோம்வாங்காதவர்கள் வாங்கி கொள்ளலாம்கொரோனா காலத்திலும் சரி தற்போது பொங்கல் பரிசு வழங்குவதிலும் சரி அரசு எந்த வித குறையும் பொதுமக்களுக்கு வைக்க வில்லை எனவே மக்களுக்கு எது நல்ல அரசு என தெரியும் கண்டிப்பாக அதிமுக அரசுக்கு வாக்களிப்பார்கள் மீண்டும் வெற்றி பெறும்தி மு க வினர் என்ன குட்டி கரணம் அடித்தாலும் ஆட்சிக்கு வரவே முடியாது மக்கள் நல்லாட்சி தொடர வாக்களிப்பார்கள் என்றார்உலக வல்லரசு நாடுகளை காட்டிலும் இந்தியாவில் விலையில்லா கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கி சுகாதார பணியாளர், மருத்துவர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூ சி போடப்பட்டு வருகிறதுஇதை எதிர்கட்சிகள் விஷம செய்தியாக திரித்து அரசியல் செய்கின்றனர்தடுப்பூசியால் எந்த பிரச்சனையும் வராது என்று தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் பரிசு தொகை அறிவிப்பில் எந்த முறைகேடும் வராது அதிகாரிகள் அதனை சரியாக கண்காணித்து கொண்டு இருப்பர் முறை கேடுகள் அதில் வராது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்