
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அய்யப்ப நாயக்கம்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை அவருடைய உறவினர் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது அப்போது மற்றொரு ஜல்லிக்கட்டு காளை சண்டையிட்டது இதில் பெரியசாமி என்பவருடைய கோவில் ஜல்லிக்கட்டு காளை கிணற்றில் தவறி விழுந்ததில் 45 அடி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தகவலறிந்து சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி மாட்டை மேலே கொண்டு வந்தனர் மேலே கொண்டு வந்த ஜல்லிகட்டு காளை சிறிது நேரத்தில் இறந்தது தெரிந்து பெரியசாமி உள்பட உறவினர்கள் கதறி அழுதனர் பின்னர் அவரது தோட்டத்தில் முறைப்படி ஜல்லிக்கட்டு காளை அடக்கம் செய்து சந்தனம் தெளித்து மாலை மரியாதை செய்தனர் இச்சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஆழ்த்தியது இந்த ஜல்லிக்கட்டு காளை கடந்த ஆண்டு பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.
You must be logged in to post a comment.