Home செய்திகள் அதிக மதுபோதையில் கார் இயக்கி தொடர் விபத்து.

அதிக மதுபோதையில் கார் இயக்கி தொடர் விபத்து.

by mohan

மதுரை திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரை யை சேர்ந்த சேர்ந்த .ரிஷி வரன் 27 இவர் தன்னுடைய காரில் வீட்டிலிருந்து கிளம்பி தன்னுடைய நண்பன் நரிமேடு சேர்ந்த விஜய் என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாருக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடி மது அருந்திவிட்டு அங்கிருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு மதுபோதையில் தனது காரை எடுத்துக்கொண்டு எல்லிஸ் நகர் கெனெக்ட் ரோடு வழியாக பழங்காநத்தம் ரவுண்டானா வந்து வீட்டிற்கு செல்லும்போது மதுபோதையில் தாறுமாறாக வண்டியை ஏகி 4 விபத்துக்களை ஏற்படுத்தி இறுதியாக திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் மெர்சி ஸ்டோர் எதிரில் உள்ளகறிக்கடை பேக்ஸ் மற்றும் சீட் கவர்ஸ்ஆகிய 3 கடைகளையும் சேதப்படுத்தி கடைக்குள் புகுந்து கடையில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தை ஏற்படுத்திய நபரை நிதானம் இல்லாத மது போதையில் இருந்ததால் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்…. விபத்து நடக்கும் சற்று நேரத்துக்கு முன் கடையை அடைத்து சென்றதால். அதிர்ஷ்டவசமாக கடையில் இருந்தவர்கள் உயிர்தப்பினர் மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கி நபர் காரில் உள்ள ஏர்பேக் ஓபன் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். இரவு நேரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!