Home செய்திகள் பூங்காவின் நடுவில் அமைக்கப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதே பகுதிக்குள் வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை.

பூங்காவின் நடுவில் அமைக்கப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதே பகுதிக்குள் வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை.

by mohan

திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது ஹார்விபட்டி. இந்த ஹார்விபட்டியானது 1941ல் அனைத்து வசதிகள் மற்றும் உள் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட பகுதியாகும்.இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் பொது ப்யன்பாட்டிற்க்கு ஹார்விபட்டியின் மையப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தற்போது 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 50 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மற்றொரு நீர்த்தேக்க தொட்டியும் உள்ளது. இந்த நிலையில் முல்லைப்பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 10 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க மாநகராட்சி முயற்சி செய்கிறது. இந்த புதிய நீர்த்தேக்க தொட்டியை இப்பகுதியை சேர்ந்த பூங்கா பாதுகாப்பு குழு, ஹார்விபட்டி பொதுமக்கள், கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு பொது நல மக்கள் அமைப்பினர் பூங்காவில் அமைக்க வேண்டாம்எனவும் இதே பகுதியில் அரசுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் உள்ளதாகவும் அந்த இடத்தில் இந்த புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும் என வலியுறுத்திகின்றனர்.இது குறித்து பூங்கா பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில் அரசுக்கு சொந்தமான பல் கோடி மதிப்புள்ள இடங்களை ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்வதால் பூங்காவின் மையப்பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்என முயற்சி செய்கின்றனர். ஆனால் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பூங்காவை பூங்கா பாதுகாப்பு சட்டப்படி அரசு பாதுகாத்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை இதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பாண்டுரங்கன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பூங்காவின் மையத்தில் 10 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com