
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அமமுக விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு கட்சி நிர்வாகிகள் கழகக் கொடியைறியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி கிராமத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் ,தென் மண்டல அமைப்புச் செயலாளருமான உசிலை மகேந்திரன் முன்னிலையில் கள்ளிக்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாரி ,மேற்கு ஒன்றியம் கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இதில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் உசிலை மகேந்திரன் பேசியபோது:வருகிற 2021 தேர்தலில் அமமுக தலைமையிலான டிடிவி தினகரன் அவர்களை வெற்றி பெற பாடுபட வேண்டும்.திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ அமைச்சருமான ஆர் பி உதயகுமார் ஊர் ஊராக சென்று மக்களுக்கு 100 ரூபாய் கொடுத்து ஏமாற்றி வருகிறார்.இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் வருகிற தேர்தலில் அமமுக தான் வெற்றி பெறும் என அவர் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.